Connect with us

சினிமா செய்திகள்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு இழிவான சினிமா.. கோவா திரைப்பட விழாவில் சர்ச்சை!

Published

on

The Kashmir Files Is A Vulgar Cinema IFFI Jury Nadav Lapid

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு இழிவான சினிமா என கோவா சர்வதேச திரைப்பட விழாவின் ஜூரி நாடவ் லெபிட் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், காஷ்மீரில் இருந்து இந்துக்கள் வெளியேறியது பற்றிய கதை கருவை கொண்டது. இந்த படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர், பிரகாஷ் பெலவாடி, புனித் இஸ்ஸார் மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

கோவாவில் 53வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில், அதில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்த திரைப்பட விழாவின் போது இன்று தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் திரையிடப்பட்டுள்ளது. அதை பார்த்த சர்வதேச திரைப்பட விழாவின், தேர்வுக்குழு ஜூரி நாடவ் லெபிட், “தி காஷ்மீர் டைல்ஸ் ஒரு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம்.

மிகவும் கெளரவமான இது போன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த படத்தைப் பார்த்த எங்கள் அனைவருக்கும் மன உளைச்சலையும் தந்துள்ளது” என தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடவ் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் அனுபம் கெர், நாடவ் இப்படி சொல்லி இருப்பது வெட்கக்கேடானது. சித்தி விநாயகர் அவருக்கு அறிவை புகட்டட்டும். பொய் எவ்வளவு உயரமாக இருந்தாலும் உண்மையுடன் ஒப்பிடும் போது அது சிறியதே என தெரிவித்துள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் திரையிடப்பட்ட போது பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்கள் பெருமையாகப் பேசிய நிலையில், பல்வேறு தரப்பினர் இது ஒரு வெறுப்புணர்வைத் தூண்டும் படமாக உள்ளது என விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?