சினிமா
சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் சஞ்சய் தத்தை வரவேற்ற விஜய்: இது வேறலெவல் லியோ!

லியோ படம் காஷ்மீரில் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், சரியாக திட்டமிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு பிரபலங்களாக அழைத்து வந்து அவர்களின் போர்ஷனை முடித்து விட்டு பேக்கப் செய்து வருகிறார்.
முன்னதாக மிஷ்கின் போர்ஷனை ஆரம்பத்திலேயே முடித்து விட்ட லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் கவுதம் மேனன் போர்ஷனை காஷ்மீரில் முடித்து இருந்தார்.

#image_title
இந்நிலையில், அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விஜய்யுடன் பலமான சண்டை போட லியோ படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
காஷ்மீருக்கு விமானத்தில் வந்து இறங்கிய அவரை லியோ படக்குழுவினர் அன்புடன் வரவேற்ற வீடியோவை அதிகாரப்பூர்வமாகவே செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் வெளியிட்டு தளபதி ரசிகர்களை தலை கால் புரியாதபடி மாற்றி உள்ளது.
ஐ லவ் சாக்லேட் எனும் ரெஸ்டாரண்டில் நடைபெற்ற சந்திப்பில் எடுத்த வீடியோவை வெளியிட்ட நிலையில், இங்கேயும் சாக்லேட்டா என ரசிகர்கள் அதையும் நோட் செய்துள்ளனர்.

#image_title
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் லியோவாக விஜய் வேறலெவலில் இருப்பதை பார்த்த தளபதி ரசிகர்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் எல்லாம் எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோவும் டிரெண்டாகி வருகிறது.
லியோ திரைப்படம் டைட்டில் அறிவிக்கப்பட்டு ப்ரோமோ வெளியாகி காஷ்மீரில் 2 மாதங்களாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த பக்கம் இன்னமும் அஜித்தின் இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட மார்ச் 2வது வாரம் முடிந்த நிலையிலும் வெளியாகாமல் இருப்பது அஜித் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.