ga('set', 'anonymizeIp', 1);

Categories: சினிமா செய்திகள்

தளபதி விஜய்யின் அடுத்த நான்கு படங்களின் இயக்குனர்கள் இவர்கள் தான்!

தளபதி விஜய் நடித்து வரும் 66வது திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த நான்கு திரைப்படங்களுக்கான இயக்குனர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியையும் அவர் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தளபதி 69 படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் அதற்குள் அவர் சூர்யாவின் வாடிவாசல் வரை படத்தை முடித்துவிட்டு இந்த படத்துக்கு தயாராகி விடுவார் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து தளபதி 70 படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கயிருப்பதாகவும் இந்தப் படம் இதுவரை தமிழ் சினிமாவில் வராத வித்தியாசமான கதை என்றும் இந்த திரைப் படத்தில் நான்கு வேடங்களில் விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Published by
Shiva

Recent Posts

  • வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு நிதித்துறையில்…

4 days ago
  • வேலைவாய்ப்பு

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

காந்திகிராம கிராமிய…

4 days ago