சினிமா செய்திகள்
தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் லுக், டீசர்.. மகிழ்ச்சியில் தல, தளபதி ரசிகர்கள்!

நீண்ட காலமாக தல, தளபதியைத் திரையில் பார்க்காமல் உள்ள ரசிகர்கள், தீபாவளிக்கு தங்காளாக்கு ஆறுதலாகுவது ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
இப்படி ஆவலுடன் எதிர்பார்த்து வந்த தல, தளபதி ரசிகர்களை மகிழ்ச்சி அடை வைக்கும் தகவல் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்துள்ளது.
நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கும் வலிமை படத்திலிருந்து இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை. எனவே தீபாவளிக்கு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தல ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல தளபதியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே தல, தளபதி படங்கள் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றாலும், இருவரின் படங்களின் ஃபார்ஸ்ட் லுக் மற்றும் டீசர்கள் வெளியாகி தீபாவளியைச் சிறப்பிக்க வைக்கப்போகிறது.




















