தமிழ்நாடு
சென்னையில் மின் உற்பத்திக்கான கார்பன் படிமத்தைக் குறைக்க டான்ஜெட்கோ முடிவு!

சென்னையில் கார்பன் படிமத்தைக் குறைக்கும் நோக்கமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்களை ஆமைக்கு முடிவு செய்துள்ளது.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் எரிவாயு விசையாழி நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை செய்யும் பணிகளைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தொடங்கியுள்ளது.
சென்னை பிரிட்ஜில் உள்ள மூடப்பட்ட எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தைத் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையமாக மாற்றவும் முடிவு செய்துள்ளது.
மேலும் புதிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலமாக மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை எண்ணூரில் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு குழாயைப் பயன்படுத்தவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது.