தமிழ்நாடு
பிரபல பாம்பன் ரயில் பாலத்துக்கு ஓய்வு.. புதிய பாலம் எப்போது திறக்கப்படும்?

100 வருடங்கள் பழமையான பாம்பன் ரயில் பாலத்துக்கு ஓய்வு அளித்துவிட்டு புதிய பாலம் மூலம் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் படி, மண்டாம் – பாம்பன் இணைப்பு ரயில் பாலமான, பாம்பன் பாலம் பயன்பாட்டைப் பாதுகாப்பு கருதி நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

புதிய பாம்பன் பாலன் கட்டி முடித்த பிறகு 2023 ஜூலை மாதம் முதல் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் ரயில் சேவை தொடங்கப்படும்.
இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பாலம் 1914-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும்.
இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் சென்று வர ஏற்றவாறு கத்திரி வடிவ தூக்கு பாலம் உள்ளது இதன் தனி சிறப்பம்சம் ஆகும்.