Connect with us

தமிழ்நாடு

சென்னையில் 1000 மிமீ மழை: இதற்கு முன் எந்தெந்த ஆண்டுகளில் பெய்தது?

Published

on

சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வரை 1000 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் இதற்கு முன் கடந்த 200 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே 1000 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழை குறித்த விவரங்களை தமிழ்நாடு வெதர்மேன் அவ்வப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி மாலை ஏழு முப்பது மணி வரை 1003 மில்லி மீட்டர் மழை சென்னையில் பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு முன் 1000 மில்லி மீட்டர் பெய்த மழை பெய்து ஆண்டுகள் குறித்த விவரங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 1088 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1078 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1049 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அதிகபட்சமாக நவம்பர் மாதத்தில் 1088 மில்லி மீட்டர் மழை கடந்த 1918ம் ஆண்டு பெய்த நிலையில் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் மூன்று நாட்களில் அந்த சாதனையை முறியடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்5 மணி நேரங்கள் ago

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரிப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Yüreğir’de forklift kiralama konusunda uzman ekibimizle size en uygun çözümleri sunmaktayız. – бисквитка, която се използва за да запази потребителското име при оставяне на коментар.