Connect with us

இந்தியா

வைகோ எம்பியாக பதவியேற்க சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிப்பு: மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்!

Published

on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்கு பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் வாய்ப்பை கொடுத்தது. அதன்படி வைகோ மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வைகோ ஒரு ஆண்டு சிறை தண்டனை மட்டும் பெற்றுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை.

இந்நிலையில் வைகோவுக்கு பதவிபிரமாணம் செய்து வைக்க கூடாது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா ஏற்கனவே மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் வைகோ உள்ளிட்ட தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பேரும் அடுத்த வாரம் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சூழலில் வைகோ நேற்று முன்தினம் இந்தி மொழிக்கு எதிராக ஒரு பேட்டி அளித்தார். அது வட இந்திய ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதை காரணமாக வைத்து வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க கூடாது என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், இந்தி வளர்ந்த மொழியல்ல, இந்தியில் இலக்கியமாக வெளியிடப்பட்ட ஒரே புத்தகம் ரயில்வே நேர அட்டவணைதான் எனவும் வைகோ கூறியிருக்கிறார். இது அனைத்து இந்தியர்களையும் மோசமாக இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆங்கிலத்தில் மட்டும்தான் பேச வேண்டும் என வலியுறுத்தி, இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றான இந்திக்கு களங்கம் விளைவித்துள்ளார். சமஸ்கிருத சொல்லகராதிதான் இந்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சமஸ்கிருதம் செத்துப்போன மொழி, அதனை படிப்பது பயனற்றது என்றும் வைகோ விமர்சித்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் இழிவுபடுத்தியுள்ளார் வைகோ.

மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது அரசியல் சாசனத்தை நிலைநிறுத்துவேன் என்று தான் எடுத்த சத்திய பிரமாணத்தை வைகோ மீறியுள்ளார். இது கடும் ஆட்சேபத்திற்குரியது, எனவே வைகோ மாநிலங்களவை உறுப்பினராக இடம்பெறுவது குறித்து தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்1 நாள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்1 நாள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 நாள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
Of sonic shoes but want more everyday functionality, check out. The 2025 global life work balance index shows new zealand and spain at the top, mostly thanks to generous leave policies. Mvp у спорті : що означає нагорода та як визначають найціннішого гравця.