உலகம்
பதவி விலகினார் பிரதமர்: உலக நாடுகள் இடையே பரபரப்பு

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார வீழ்ச்சி அடைந்த நிலையில் இந்த வீழ்ச்சிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச தான் காரணம் என மக்கள் கொந்தளித்தனர்.
இதனை அடுத்து பிரதமர் அலுவலகம் முன்பும் அதிபர் அலுவலகம் முன்பும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது என்பதும் கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவே பதவி விலகி விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை அடுத்து இந்தியா உள்பட உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.