இந்தியா
மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது மருமகன்!
Published
3 years agoon
By
caston
ஜார்கண்ட் மாநிலத்தில் மாமியாருக்கு அவரது 22 வயதான மருமகன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஊர் பஞ்சாயத்து மாமியாருக்கு தண்டனை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் கோடேர்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சந்தீப் ஷா என்ற 22 வயதான நபர் தனது மாமனார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தனது மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த பாலியல் துன்புறுத்தல் மூன்று மாதங்களாக நீடித்து வந்துள்ளது. இதனால் மனம்நொந்துபோன அந்த மாமியார் இதுகுறித்து ஊரில் உள்ள மற்ற பெண்களிடம் கூறியுள்ளார். தனது மருமகனின் நடவடிக்கைகள் சரியில்லை என்று.
இதனையடுத்து கடந்த 21-ஆம் தேதி பஞ்சாயத்து கூடியபோது மருமகனை தவறாக கூறியதாக மாமியாருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது தலைமுடியை கத்தரியால் வெட்டி அவரை அடித்துள்ளார்கள் பஞ்சாயத்தார்கள். தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மருமகன் தனக்கு கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், பஞ்சாயத்தார் தனக்கு கொடுத்த தண்டனை குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அவர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தில் 11 பேரை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாகியுள்ளனர்.
You may like
மாமியார் வீட்டில் சண்டை: மாறி மாறி தற்கொலை செய்து கொண்ட கணவன் – மனைவி!
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியார், மருமகள் வெற்றி!
’மாமியார் மெச்சிய மருமகள்’ பட நடிகரின் வீட்டில் மாமியார்-மருமகள் குடுமிப்பிடி சண்டை!
ஒரு படிக்கட்டுக்கு ஒரு கட்டு பணம்!.. இப்படி ஒரு மாமியாரா?!… கொடுத்து வச்ச மருமகள்தான்..(வீடியோ)….
சென்னையில் கனிமொழி எம்பி இன்று போராட்டம்: காரணம் இதுதான்!
சூனியம் எடுப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி கையும் களவுமாக பிடிபட்டார்!