சினிமா
விஜய் சேதுபதியுடன் மோதும் சிவகார்த்திகேயன் – ரெண்டுமே ஹிட் அடிக்குமா?…

டாக்டர் பட வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டான். இப்படத்தை சிபிசக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த வருடம் பிப்ரவரி 18ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதேபோல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா உள்ளிட்ட பலரும் நடித்து உருவகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் அதே தேதியில் வெளியாகவுள்ளது.
டிசம்பர் மாதம் 28ம் தேதி இப்படத்தை வெளியிடத்தான் முதலில் திட்டமிட்டனர். ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுவிட்டது.
இதையடுத்து, விஜய் சேதுபதியோடு சிவகார்த்திகேயன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.


















