சினிமா செய்திகள்
’தளபதி 66’ பட இயக்குனரை டுவிட் மூலம் உறுதி செய்த பிரபல பாடகர்!

தளபதி விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் முக்கிய வேடத்தில் அபர்ணாதாஸ் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி கொண்டிருக்கின்றன. விஜய் நடிக்கும் அடுத்த படமான ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ணா இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று இயக்குனர் வம்சியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான கிரிஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் வம்சிக்கு தனது பிறந்த வாழ்த்துக்களை கூறியதோடு நீங்கள் இயக்கப்போகும் விஜய்யின் படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டு அதற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஜய் படத்தை இயக்குனர் வம்சி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 66’ திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் நேரடியாக தயாரிக்கப்படுகிறது என்றும், விஜய் படத்திலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்றும் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்க இருப்பதாகவும் முழுக்க முழுக்க இந்த படம் வெளிநாட்டில் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.




















