இந்தியா
பட்ஜெட்டில் இந்த 7 முக்கிய அம்சங்கள் உள்ளது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சற்றுமுன் மத்திய பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து தற்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
முதல் கட்டமாக அவர் ஏழு முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் உள்ளடக்கி உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவை ஒருங்கிணைந்த வளர்ச்சி, உள்கடமைப்பு மற்றும் முதலீடு, பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி, நிதி துறை சார்ந்த அறிவிப்புகள் ஆகியவை இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஊரகப்பகுதிகளில் இருக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கத்துக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
மேலும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் திட்டமாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தனிநபர் வருமானம் இந்தியாவில் உயர்ந்துள்ளதாகவும், ரூ. 1.97 லட்சம் ஆக தனிநபர் வருமானம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் முறையில் விவசாயத்திற்கு பொதுக்குழு கட்டமைப்பு வசதி உருவாக்கப்படும் என்றும் விவசாயம் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பழங்களுடையினார் மேம்பாட்டிற்காக 15,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்றும் தற்போது உள்ள கல்லூரிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் உள்ள கூட்டுறவு சங்கங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்த புதிய கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுதானியங்கள் ஆராய்ச்சிக்காக ஹைதராபாத்தில் தனி நிறுவனம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வேளாண் துறைக்கு 20 லட்சம் கோடி கடன் இலக்க்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறிய அவர் மேலும் சில முக்கிய அம்சங்களை தெரிவித்து வருகிறார். இன்னும் என்னென்ன முக்கிய அம்சங்கள் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.