இந்தியா
அதானி குழுமத்தின் பங்குகள் இறங்கியும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு பாதிப்பு இல்லை.. ஏன் தெரியுமா?

கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்த போதிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தி அறிக்கை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. இந்த அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் சரிந்தன என்பதும் ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் 20 முதல் 25% சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தனர். அதுமட்டுமின்றி கௌதம் அதானி தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய செல்வத்தை இழந்தார் என்பதும் உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் முதல் 10 இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

adani1
இந்த நிலையில் அதானி குழுமத்தின் நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி மற்றும் வங்கிகள் உள்பட பல நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் அடைந்தாலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகள் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யவில்லை என்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தப்பித்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில மியூச்சுவல் ஃபண்டுகள் அதானி குழுமத்தின் நிறுவனங்களில் முதலீடு செய்து இருந்தாலும் அவை கிட்டத்தட்ட ஒரு சதவீதம் முதல் இரண்டு சதவீதம் மட்டுமே முதலீடு செய்துள்ளன என்றும் அதனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளின் பங்கு 1.19% மட்டுமே உள்ளது. அதானி பவர் லிமிடெட் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் எந்தவிதமுதலீடும் செய்யவில்லை. அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் 4.4% மட்டுமே முதலீடு செய்துள்ளன.
அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் 0.13% மட்டுமே முதலீடு செய்துள்ளன. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் வெறும் 0.12% மட்டுமே முதலீடு செய்துள்ளன.
அதானி வில்மார் லிமிடெட் நிறுவனத்தில் மியூட்சுவல் ஃபண்ட்கள் 0.02% மட்டுமே முதலீடு செய்துள்ளன. அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் 0.13% மட்டுமே முதலீடு செய்துள்ளன. எனவே தான் அதானி நிறுவனத்தின் சரிவு மியூட்சுவல் முதலீட்டாளர்களை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.