இந்தியா
மொபைல் போன், டிவி விலை குறையும்.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!

செல்போன் உதிரி பாகங்களுக்கான வரி குறைக்கப்பட்டதை அடுத்து செல்போன் விலை குறையும் என்றும் அதேபோல் டிவி உதிரி பாகங்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் டிவி விலையும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் டிவி பேனல், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்கவரி 21 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து செல்போன்கள் மற்றும் டிவி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சைக்கிள் மற்றும் பொம்மைகளுக்கான இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்திய பொம்மை மற்றும் சைக்கிள் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டில் இருந்து அதிக அளவில் சைக்கிள் மற்றும் பொம்மைகள் இறக்குமதி செய்யப்படும் என்றும் இந்திய பொம்மைகளுக்கான விற்பனை குறையும் என்று கூறப்படுகிறது.
பட்ஜெட்டால் விலை உயரும் பொருட்கள்:
- தங்கம், வெள்ளி நகைகள்
- கவரிங் நகைகள்
- சிகரெட்
- இறக்குமதி செய்யப்பட்ட கார்
- இறக்குமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள்
- மின்சார சமையலறை புகைபோக்கி
- இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்
- பொம்மைகள்
- இறக்குமதி செய்யப்படும் ரப்பர்கள்
- சமையல்கூடங்களில் பயன்படுத்தப்படும் சிம்னி
பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள்:

#image_title
- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள்
- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சிகள்
- லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்
- தாமிர கழிவுப் பொருட்கள்
- செயற்கை வைரங்கள்
- இறால் உணவுகள்