வேலைவாய்ப்பு
SBI வங்கியில் 2600 அதிகாரி பணியிடங்கள் – சென்னை மண்டலத்தில் மட்டும் 120 இடங்கள்! இப்போது விண்ணப்பியுங்கள்ஸ

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் பேஸ்ட் ஆபிசர் (Circle Based Officer – CBO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தமாக 2,600 காலியிடங்கள் இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் நிரப்பப்படவிருக்கின்றன. இதில், தமிழகத்தின் சென்னை மண்டலத்திற்காக மட்டும் 120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி துறையில் வேலை அனுபவம் இருந்திருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 30 வயது வரை. இடஒதுக்கீட்டின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது சலுகை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு (Objective + Descriptive)
நேர்முகத் தேர்வு (Interview)
எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், கணினி அறிவு, வங்கி மற்றும் பொருளாதார அறிவு ஆகியவற்றில் 120 மதிப்பெண்களுக்கு Objective தேர்வு நடைபெறும். பின்னர் கட்டுரை மற்றும் கடித எழுதல் தேர்வும் (Descriptive) நடத்தப்படும்.
சம்பள விவரம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓபிசி, EWS: ரூ.750
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள்: கட்டண விலக்கு
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் SBI-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://sbi.co.in/hi/web/careers/current-openings
என்ற முகவரியில் சென்று முக்கியத்துவம் உள்ள மே 29, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.





