வேலைவாய்ப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – சிறப்பு கல்வியாளர், தொழில் சிகிச்சையாளர், சமூக பணியாளர் காலிப்பணியிடங்கள்!

சேலம் மாவட்டம்:
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் (DEIC – One Stop Center) தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற மூன்று பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 25, 2025 மாலை 5.00 மணிக்குள் ஆகும்.
காலிப்பணியிடங்கள் விவரம் (Vacancy Details):
1. சிறப்பு கல்வியாளர் (ஆட்டிசம்) – Special Educator for Behavioral Therapy (Autism)
கல்வித்தகுதி: அறிவுசார் குறைபாடுகள் தொடர்பான சிறப்பு கல்வியில் இளங்கலை/முதுகலை பட்டம் (UGC அங்கீகரிப்பு)
வயது வரம்பு: 40 வயதிற்குள்
சம்பளம்: ₹17,000 / மாதம்
2. தொழில் சிகிச்சையாளர் (Occupational Therapist)
கல்வித்தகுதி: Occupational Therapy இல் UG/PG பட்டம்
வயது வரம்பு: 40 வயதிற்குள்
சம்பளம்: ₹23,000 / மாதம்
3. சமூக பணியாளர் (Social Worker)
கல்வித்தகுதி: MSW (Master of Social Work)
வயது வரம்பு: 40 வயதிற்குள்
சம்பளம்: ₹23,800 / மாதம்
முக்கிய குறிப்புகள் (Important Notes):
இது முற்றிலும் தற்காலிக பணி, நிரந்தரம் செய்யப்படாது
பணியில் சேர சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) வழங்க வேண்டும்
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விருப்பத்தையும், சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப முறைகள் (How to Apply):
விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிப்பை https://salem.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
நிரப்பிய விண்ணப்பத்தில் கீழ்கண்ட தகவல்களை இணைக்க வேண்டும்:
விண்ணப்பதாரர் பெயர்
தந்தை/கணவர் பெயர்
பிறந்த தேதி, வயது
கல்வித்தகுதி சான்றுகள்
சமூகச் சான்றிதழ்
ஆதார் எண்
கைபேசி எண், மின்னஞ்சல்
முன் அனுபவ சான்றுகள்
நிரந்தர மற்றும் தற்காலிக முகவரி
விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அல்லது Speed Post மூலம் அனுப்ப வேண்டும்:

















