டிவி
ரியோவை கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய மனைவி; பிக் பாஸ் வீட்டில ஒரே ரொமான்ஸுதான்!

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கடந்த சில நாட்களாக சர்ப்ரைஸ் விசிட் அடித்து வருகின்றனர். இதுவரை ஷிவானி, பாலாவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கும் நிலையில், இன்று ரம்யாவின் வீட்டாரும் விசிட் அடித்துள்ளனர்.
அடுத்தபடியாக நடிகர் ரியோவின் மனைவி ஸ்ருதி, பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று நுழைந்துள்ளார். இதைப் பார்த்த ரியோ, மனைவியை ஆறத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டனர். இந்த அன்பால் மொத்த பிக் பாஸ் வீடும் நெகிழ்ச்சியில் மூழ்கியது. இது குறித்தான ப்ரொமோவும் படுவைரலாக மாறியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் டைட்டில் வின்னராக வருவதற்கு ரியோவுக்கு நல்ல வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. அவருக்கு நெருக்கமாக இருந்த நிஷா, அர்ச்சனா ஆகியோர் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து வெளியேறிய காரணத்தால், ரியோ தற்போது சற்றுத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இருப்பினும் தொடர்ந்து உற்சாகத்துடன் வீட்டில் செயல்பட்டு வருகிறார் ரியோ.