தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அரசி விலை கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரிப்பு.. என்ன காரணம்?

தமிழ்நாட்டில் அரசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அரிசியின் அளவு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அரிசி சில்லறை விற்பனை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அரசியின் வரத்து குறைந்ததால், தமிழ்நாட்டு ரக அரிசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
எனவே அரிசி சாகுபடி செய்துள்ள தமிழ்நாட்டு விவசாயிகள் தங்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் லாபம் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
கொரோனா காலத்தில் தமிழ்நாட்டு அரிசி விலை குறைந்த நிலையில் இப்போது அது மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.