இந்தியா
பயணிகள் இரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைப்பு

தெற்கு இரயில்வே சார்பில் புதன்கிழமை 01.04.2026 வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு…
ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்தவர்கள் ரயிலில் ஏறும் நிலையங்களை மாற்றும் நடைமுறை எளிமையானதாக மாற்றப் பட்டுள்ளது. இதன்படி இதுவரை முன்பதிவு செய்தவர்கள் தங்களது பதிவு உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்ற விரும்பினால் பயண உறுதி பட்டியல் வருவதற்கு 24 மணி நேரம் முன்பாகவே மாற்ற வேண்டும்.
இந்த நடைமுறையானது ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ளலாம் என கால இடைவெளி குறைக்கப்பட்டு புதன்கிழமை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே ரயில் ஏறும் நிலைய மாற்றம் பொருந்தும். மேலும் இந்த நிலைய மாற்றம் ஒருமுறை மட்டுமே செய்ய இயலும். மாற்றப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட அதே நிலையத்திலிருந்நு மட்டுமே பயணிகள் ரயிலில் ஏநமுடியும்.
அந்த நிலையத்தில் பயணி ஏறாவிடில் காத்திருப்பு பட்டியலில் உள்ள மற்ற பயணிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











