தமிழ்நாடு
அரசியலுக்கு முழுக்கு போட்ட ரஜினி; ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள் என்ன?

உடல்நலக் குறைவால், தான் நினைத்தபடி அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியவில்லை என்று அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்நிலையில் அவர் தனது ரசிகர்களுக்கும், மக்கள் மன்றத்தினருக்கும் ஒரு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளார்.
‘இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தின்றுக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்.
மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுன்னும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். அது வீண் போகாது. அந்தப் புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும். கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நான் உங்களை சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக ‘உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே’ என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.




















