தமிழ்நாடு
‘கடைசி பத்திய படிங்க… ரஜினியின் தாக்கம் தேர்தலில் இருக்கும்!’- குருமூர்த்தி சூசகம்

தன் உடல்நிலையால் அரசியல் வருகை சாத்தியமில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கு மிகவும் நெருக்கமான துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, எதிர்வரும் தேர்தலில் தமிழக அரசியலில் ரஜினியின் தாக்கம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து குருமூர்த்தி, ‘தனது உடல்நிலையில் பின்னடைவு ஏற்படத்தைத் தொடர்ந்து, அரசியலுக்கு வர முடியாது என்பதை என்னிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதைத் தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் கடைசி பத்தியைப் படியுங்கள். நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தமிழக மக்களுக்கு அவர் சேவையாற்றுவார் என்று கூறியுள்ளார். எனக்குத் தெரிந்து, அவர் தமிழகத்தில் அரிசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார். 1996 ஆம் ஆண்டு ஏற்படுத்தியதைப் போல’ என்று சூசகமான ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார்.
After @rajinikanth health set back he told me he about his decision. It was inevitable. But read the penultimate para of his statement saying without directly in politics he will serve the people of Tamil Nadu. In my assessment he will make a political impact on TN. Like in 1996 https://t.co/ukjLL5VO73
— S Gurumurthy (@sgurumurthy) December 29, 2020
ரஜினி, உடல்நல பாதிப்பு ஏற்பட்டுவிட்டது, இதனால் நேரடி அரசியலுக்கு வர முடியாது என்று வெளிப்படையாக அறிவித்துவிட்ட பின்னரும், அவரை குருமூர்த்தி தொடர்ந்து குடைந்து கொண்டிருப்பது ஏன் என்று நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.



















