தமிழ்நாடு
தமிழகத்தில் ராமர் கோவிலே இல்லை, எங்களுக்கு ராமர் என்றால் யாரென்றே தெரியாது: ஜோதிமணி எம்பி

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வட இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் ராமர் கோவிலே இல்லை என்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராமர் என்றால் யார் என்றே தெரியாது என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாங்கள் ஒவ்வொரு வாரமும் கோவிலுக்கு செல்வோம் என்றும் ஆனால் ராமர் கோவில் எங்கள் தமிழகத்தில் இல்லை என்றும் நாங்கள் வழக்கப்படி செல்லும் கோவிலுக்கு தான் செல்வோம் என்றும் அவர் தெரிவித்தார் .
அவரது கேள்விக்கு நெட்டிசன்கள் பதில் கூறிய நிலையில் தமிழகத்தில் மதுராந்தகம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ராமர் கோவில் இருப்பது ஏன் எம்பி ஜோதிமணி தெரியவில்லை என்றும் அவர் கூறினர்.
மேலும் தமிழர்கள் யாரும் ராமரை தெரிந்து வைக்கவில்லை என்று கூறியதற்கு கம்பராமாயணத்தை எந்த மொழியில் கம்பர் எழுதினார் என்றும் கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.
இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் ஈடுபட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
I’m from Tamil Nadu, I don’t know Ram
You ask anybody in Tamil Nadu
We don’t see any Ram TempleTN Congress MP, Jothimani pic.twitter.com/cmCTevhCwP
— Tinku Venkatesh | ಟಿಂಕು ವೆಂಕಟೇಶ್ (@tweets_tinku) April 19, 2022