சினிமா செய்திகள்
’அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஐதராபாத் கிளம்பினார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் கடந்த ஆண்டு ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை.
மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன் ’அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் இயக்குனர் சிறுத்தை சிவா தொடங்கியுள்ளார். இதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் நடைபெற இருப்பதை அடுத்து சற்று முன்னர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத் கிளம்பிச் சென்றார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் காரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நாட்கள் ஐதராபாத்தில் தங்கியிருந்து ரஜினிகாந்த் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
’அண்ணாத்த’ படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த். குஷ்பூ. மீனா. கீர்த்தி சுரேஷ். சூரி. பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SuperstarRajinikanth Leaves To #Hyderabad for the shoot of #Annaatthe!!! #AnnattheDiwali#Thalaivar #Superstar #Rajinikanth@sunpictures @directorsiva@immancomposer @khushsundar@Actressmeena16 #Nayanthara @KeerthyOfficial@prakashraaj@V4umedia_ pic.twitter.com/n9WJeHCmPS
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 8, 2021





















