சினிமா செய்திகள்
ரஜினி, கமல் வாய்ப்பில்லை, அஜித்-விஜய்யை ட்ரை பண்ணுங்க: ராஜமவுலிக்கு ரசிகர்கள் வேண்டுகோள்!

சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி ரஜினி கமல் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என ஆசை என்றும் ரஜினி வில்லனாக கமல் ஹீரோவாக அல்லது கமல் ஹீரோவாக ரஜினி வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராஜமௌலி எப்போதுமே படக்காட்சிகள் டூப் இல்லாமல் ஒரிஜினல் நடிகர்களை வைத்தே படமாக்கும் இயல்பு கொண்டவர் என்பதால் ரஜினி கமலுக்கு வயதாகி விட்டதால் அந்த மாதிரியான காட்சிகள் எடுக்க முடியாது என்றும் அதனால் ராஜமௌலி, ரஜினி கமலை வைத்து எடுக்கும் முடிவை கைவிட்டு அஜித் விஜய்யை இணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.
அஜித் விஜய் இருவரும் இதுவரை ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து உள்ள நிலையில் இருவரையும் மீண்டும் இணைத்து ஒரு படத்தில் நடிக்க வைத்தால் அது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் என்றும் அப்படி ஒரு முயற்சியை ராஜமவுலி, ஷங்கர் ஆகிய இருவரை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது என்பதால் ராஜமௌலி அந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா என்ற இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களுக்கு சம அளவில் கேரக்டர் கொடுத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை உருவாக்கிய ராஜமௌலி அஜீத் விஜய்க்கு அதேபோன்று கேரக்டர் கொடுத்து படத்தை உருவாக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


















