வேலைவாய்ப்பு
புதுச்சேரியில் 618 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பு: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!

மத்திய அரசின் சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 618 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 344 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளர்கள் (பெண்கள் மட்டும்) சேர்க்கப்பட உள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் முத்துமீனா அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதலில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் தேர்வு குழு மூலம் தகுதியானவர்கள் இறுதி நிலையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த விண்ணப்பங்கள் நவம்பர் 23 முதல் ஆன்லைனில் ஏற்கப்படுகின்றன. முன்னதாக Google Forms வழியாக விண்ணப்பித்தவர்கள், துறை இணையதளத்தின் மூலம் தங்களது விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே தகுதிவாய்ந்தவர்கள்; எந்த பிரிவிற்கும் வயது தளர்வு வழங்கப்படாது. விண்ணப்பதாரர்கள் நவம்பர் 23 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் டிசம்பர் 22 மாலை 5 மணி வரை மட்டுமே கீழ்க்கண்ட இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்:
இவ்வாறு அரசு அறிவிப்பு தெரிவிக்கிறது.














