சினிமா செய்திகள்
திடீர் உடல்நலக் குறைவு… மருத்துவமனையில் பவர்ஸ்டார்..!

கோலிவுட் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் இன்று திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் லத்திகா என்னும் திரைப்படத்தைத் தயாரித்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு திண்ண ஆசையா என்னும் படத்தில் நடித்து வைரல் ஆனால். அதன் பின்னரும் சில படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
நிஜ வாழ்க்கையில் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் ஒரு மருத்துவர். இடையில் பல கடன், மோசடி பஞ்சாயத்துகள் என சிக்கினாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடிக்க பவர்ஸ்டாருக்கு எப்பவும் ஒரு ஆசை இருக்கிறதாம். சென்னையில் கிளினிக் வைத்து நடத்தி வரும் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசனுக்கு இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால், அவர் உடனடியாக சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். இன்னும் முடிவுகள் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. உடல் நலன் சார்ந்தும் என்ன பிரச்னை இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம் கூட பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.