தமிழ்நாடு
தமிழ், மலையாளத்தில் டுவிட் போட்ட பிரதமர்: அனைவரும் வாக்களிக்க வேண்டுகோள்!

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்குகளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விட்டதாகவும் எந்த தொகுதிகளிலும் வாக்கு பதிவு இயந்திரம் பிரச்சினை உள்பட எந்த பிரச்சனையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக, புதுவை, கேரள மக்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்றும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
அவர் தனது ட்வீட்டில் தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதேபோல் புதுவை மக்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில் ’இன்று நடைபெறும் தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
அதேபோல் இன்று கேரளாவிலும் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து கேரள மக்களுக்கும் மலையாளத்தில் அவர் டுவிட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநில மக்கள் குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று அவர் மலையாளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
കേരളത്തിലെ ജനങ്ങളോട്, പ്രത്യേകിച്ചു് സംസ്ഥാനത്തെ യുവാക്കളോടും ആദ്യമായി വോട്ട് ചെയ്യുന്നവരോടും റെക്കോർഡ് എണ്ണത്തിൽ വോട്ടുചെയ്യാൻ ഞാൻ അഭ്യർത്ഥിക്കുന്നു.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021





















