வேலைவாய்ப்பு
பெரம்பலூர் சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2025: 8ஆம் வகுப்பு முதல் MBBS வரை – 2 பணியிடங்கள் – தகுதி, தேர்வு முறை & விண்ணப்ப விவரங்கள்!

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறை நடத்தும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் தற்காலிக நியமனமாக நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான மற்றும் விருப்பமுள்ள அவர்கள் 03.12.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
1️⃣ மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடம்: 1
கல்வித் தகுதி: MBBS
வயது வரம்பு: 40 வயதிற்குள்
சம்பளம்: ₹60,000
2️⃣ ஆய்வக உதவியாளர் (Lab Assistant)
காலியிடம்: 1
கல்வித் தகுதி: குறைந்தது 8ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 30 வயதிற்குள்
சம்பளம்: ₹8,500
🔍 தேர்வு செய்யப்படும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
📝 விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்க வேண்டும்.
இணைப்பு:
https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2025/11/17637232603153.pdf
