Connect with us

விமர்சனம்

அந்த வீடியோவை பாத்துட்டு கதை எழுதிருப்பாங்க போல… பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்!

Published

on

வடசென்னைல கானா பாடல் பாடிட்டு சுத்திட்டு இருக்குற பாரிஸ் ஜெயராஜ் சந்தானம். டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு காதலை பிரிச்சு வைக்கிறதே வேலையா வச்சுட்டு இருக்கிற அவரோட வக்கீல் அப்பா. இந்த வக்கீல் அப்பாவோட காதலை பிரிக்கும் புராஜெக்ட்ல சந்தானத்தோட காதலை பிரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுறார். அது ஏன் எதுக்கு? சந்தானத்தோட காதலை பிரிச்சு வச்சாரா இல்லையா என்பதை சொல்லியிருக்கும் படம் தான் இந்த பாரிஸ் ஜெயராஜ்…

ஹீரோவா இல்லை சூப்பர் ஹீரொவா மாற தொடர்ந்து முயற்சி செய்திருக்கும் சந்தானத்திற்கு உதவி செய்ய முயற்சி செய்திருக்கும் மற்றொரு படம் தான் இந்த பாரிஸ் ஜெயராஜ். கானா பாடகரா ஜெயராஜ் கானா பாடலைப் போல ரைமிங்கா தொடர்ந்து பேசுவது சந்தானம் சொல்வது போல கடுப்பாகுற மாதிரி காமெடியா இல்லை எரிச்சல் ஆகுற மாதிரி காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டார். ஹீரோவாகும் வெறியில் இருக்கும் சந்தானம் சாண்டி மாஸ்டர் உதவியால வழக்கம் போல கான்சியஸா கேமராவ பாத்து ஆட முயற்சி செய்திருக்கிறார். நல்லவேளை ஒரே ஒரு சண்டை தான்.

Also Read: எப்படி இந்தக் கதையெல்லாம் ஓகே பண்றீங்க… களத்தில் சந்திப்போம் விமர்சனம்

சந்தானத்தின் அப்பாவ ப்ருத்வி ராஜ் தெலுங்கு நடிகர்… சந்தானத்தின் அம்மா, கதாநாயகி அனைகா சோதி… அவரது அம்மா… மொட்டை ராஜேந்திரன், கலக்கப்போவது யாரு வினோத், லொள்ளு சபா நடிகர்கள், பழைய ஜோக் தங்கதுரை என பலரும் காமெடிக்காவே எடுத்து உள்ளே உலாவ விட்டிருக்கிறார். ஆனால், எல்லோரும் டைமிங்காக கத்திட்டு இருக்காங்களே தவிர காமெடின்னு ஒரு துளி கூட ஒர்க் அவுட் ஆகலை. பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க. இயக்குநர் எழுதியிருந்தா தானே.

பேசாமல் இயக்குநர் ஜான்சன் கே விஜய் டிவி-யிடம் பேசி லொள்ளு சபா பார்ட் – 2… பார்ட் – 3 என ஆரம்பிச்சுடலாம். ஏ1, பாரிஸ் ஜெயராஜ் படங்களை விட லொள்ளு சபா எபிசோடுகள் எல்லாம் இப்போ பார்த்தாலும் அட்டகாசமாக இருக்கும். நிறைய பாத்திரங்களை வைத்துவிட்டு காமெடி தான் டிராக் என முடிவு செய்து பழைய கதை களத்தை பிக்ஸ் செய்துவிட்டார். ஆனால், ஒரு காட்சியில் கூட காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒர்க் அவுட் ஆகும் அளவுக்கு எழுதவில்லை.

கதாநாயகன் கானா பாடகர். இசை சந்தோஷ் நாராயணன். கேட்கவே எவ்ளோ அட்டகாசமா இருக்கு. சந்தோஷ் நாராயணன் போடும் கானா பாடலுக்கு இந்த தமிழ்நாடே அடிமையாகிக்கிடக்க இந்த படத்தில் வரும் ஒரு கானா பாடல் கூட மனதில் மட்டுமில்லை காதில் ஒட்டவே இல்லை. காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவது போலத்தான் இருக்கின்றன பாடல்கள் எல்லாம். எந்த பாடலும் எந்த இடத்திலும் பொருந்தவே இல்லை. உங்களை நம்பித்தானே சந்தோஷ் சந்தானம் இந்த படத்தை நடிக்க ஒத்துட்டு இருப்பாரு. எங்களை ஏமாத்துனது மட்டுமல்ல அவரையும் ஏமாத்திட்டிங்களே சந்தோஷ்.

பாக்கெட்ல கிடக்கும் ரூ.200 உங்களை உறுத்திக் கொண்டிருந்தால் இந்தப் படத்தை நீங்கள் போய் தியேட்டரில் பார்க்கலாம். கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் இதை டெலிகிராம்லேயே பார்க்கலாம். அப்போ என்னத்துக்கு நீ போய் தியேட்டர்ல பாத்தன்னு கேட்காதீங்க. என்னால உங்களுக்கு ரூ.200 லாபம். அத யோசிங்க.

சரி Spoiler வேண்டாம் அப்படின்னு நினைக்குறவங்க இதுக்கு பின்னாடி படிக்க வேண்டாம். இந்த விமர்சனத்துக்கு தலைப்புல X-Videos பாத்துட்டு இந்த கதையை எழுதியிருப்பாங்கன்னு சொல்லியிருப்போம். அது ஏன்னா… சந்தானம்… ஹீரோயின் அனைகா சோதி காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க. முதல்நாள் காதல் பிரேக்-அப் ஆனதும் ஹீரோயின் அடுத்த நாளே சந்தானத்தை காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க. இருவரும் காதலிக்க ஆரம்பிச்சதும் சந்தானத்தின் அதான் அந்த காதலை பிரித்து வைக்கும் புனித வேலையை பார்க்கும் வக்கீல் அப்பாவுக்கு தெரிய வரும் ஹீரோயின் அனைகா தன்னோட மகள்னு.

இப்போ புரியுதா… ஆமா ஹீரோ சந்தானம் முதல் மனைவியின் மகன், ஹீரோயின் அனைகா இரண்டாவது மனைவியின் மகள். இன்னும் சொல்லனும்னா சந்தானம்… அனைகா இருவரும் அண்ணனும், தங்கச்சியும். இருவரும் காதலிக்கும் விஷயம் அப்பாவுக்கு தெரியும். அப்பா முன்னாடியே அண்ணனும் தங்கையும் ரொமான்ஸ் எல்லாம் செய்வாங்க… இன்னுமா இந்தக் கதையை நான் சொல்லணும்… நீங்க கேட்கணும்.

ரொம்ப சுமாரான முதல் பாதி… மிகப்பெரிய உறுத்தலான இரண்டாம் பாதி. இத்தனையும் தாங்கிக் கொண்டு டிவியில் இனி போட்டால் கூடா நான் பார்க்க தயாராக இல்லை. நீங்க எப்படின்னு கேட்டுக்கோங்க…

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

மாதம் ரூ.500 முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் சேமிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago

ரூ.3,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு அறிவிப்பு வெளியீடு!

வணிகம்2 மாதங்கள் ago

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

டிவி3 மாதங்கள் ago

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

சிறு தொழில்3 மாதங்கள் ago

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

தமிழ்நாடு3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

ரூ.2,33,919/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

தினபலன்4 மாதங்கள் ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/08/2023)!