தமிழ்நாடு
பாட்ஜெட் 2023-2024ல் தெற்கு ரயில்வேக்கு கிடைத்து எவ்வளவு? எந்தெந்த திட்டங்கள்.. வழித்தடங்கள்!

பட்ஜெட் 2023-2024 சென்ற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் இந்தியன் ரயில்வேவுக்காக 2.40 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இதில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கிடைக்கும்? தெற்கு ரயில்வேக்கு எவ்வளவு கிடைக்கும், எந்த ஊர்களுக்கு எல்லாம் பயன் கிடைக்கும் என கேள்விகள் எழுந்து வந்தன.
அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக இந்த செய்தி உங்களுக்கு இருக்கும்.
பாட்ஜெட் 2023-2024ல் தெற்கு ரயில்வேக்கு 11,313 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 6,080 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் புதிய ரயில் பாதைகள் மற்றும் இரட்டை வழித்தட பணிகளுக்காக செலவழிக்கப்படும்.
திண்டிவனம்-நகரி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி, மொரப்பூர்-தர்மபுரி, ராமேஸ்வரம்-தனுஷ்கோடி, ஈரோடு-பழனி, திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை ஆகிய புதிய ரயில் பாதைகளுக்கு ரூ.1,158 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.