இந்தியா
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அரசின் பதவி!

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்பி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் செய்த போது கூட ரவீந்திரநாத் அவர்களுக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அவருக்கு எந்த மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பதவிக்கு பதிலாக மத்திய அரசின் முக்கிய பதவி ஒன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உறுப்பினராக ரவீந்திரநாத் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் திமுக எம்பி தயாநிதி மற்றும் மேற்கு வங்க காங்கிரஸ் எம்பி செளகதா ராய்ஆகியோர்களும் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூவரும் இந்த பதவியில் மூன்று ஆண்டுகாலம் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.















