உலகம்
வடகொரிய அதிபரின் தலையில் பேண்டேஜ்- குழப்பத்தில் உலக நாடுகள்!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலையில் பேண்டேஜ் உடன் காணப்பட்ட புகைப்படம் உலக நாடுகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.
வடகொரிய எப்போதுமே உலக நாடுகளைவிட்டு விலகியே தான் இருந்து வருகிறது. அந்நாட்டு அதிபரும் அவ்வப்போது அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சத்தில் தவிக்க வைக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் பின் தலையில் பேண்டேஜ் ஒட்டப்பட்டு இருந்தது.
வடகொரிய அதிபருக்கு பின் தலையில் ஏதேணும் காயம் ஏற்பட்டதா அல்லது தலையில் ஏதேணும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா போன்ற கேள்விகள் சர்வதேச ஊடகங்களில் அதிகளவில் காணப்படுகின்றன. அப்படி வடகொரிய அதிபருக்கு ஏதேணும் நேர்ந்தால் என்ன ஆவது என்றும் உலக நாடுகள் பதைபதைக்கின்றன.

இதற்கு முக்கியக் காரணமே அணு ஆயுதங்கள்தான். வடகொரியாவில் அதிக அளவில் அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அந்த அதிபருக்கு ஏதேணும் நேர்ந்தால் அந்த ஆயுதங்கள் யாரிடம் சென்று சேரும் அதனால் அண்டை நாடுகளுக்கு ஏதேணும் பிரச்னை ஏற்படுமா என்பது போன்ற குழப்பங்கள் எழுந்துள்ளன.










