வணிகம்
குடியுரிமை சட்டம் எதிர்த்து போரட்டம்; இணையதள சேவை துண்டிப்பு; டெலிகாம் நிறுவனங்கள் நட்டம் எவ்வளவு தெரியுமா?

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே போராட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வரும் மாவடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
இணையதள சேவை துண்டிப்பால் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வது குறைந்துள்ளது. மறுபக்கம் இணையதள சேவை துண்டிப்பால் டெலிகா நிறுவன்ங்கல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2.45 கோடி ரூபாய் நட்டம் அடைந்து வருவதாக செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நட்டம் ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்களும் அடங்கும்.
வெள்ளிக்கிழமை உத்தர பிரதேசத்தின் 18 மாவட்டங்களில் மொபைல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருந்தது.