சினிமா செய்திகள்
சூப்பர் சூர்யா; என்ஜிகே டிரைலர் அட்டகாசம்!

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சூர்யாவின் என்ஜிகே டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று மாலை சூர்யாவின் என்ஜிகே படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் படத்தின் இயக்குநர் செல்வராகவன், சூர்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நாயகி சாய்பல்லவி கலந்து கொண்டனர்.
இந்நிலையில், படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கும் அரசியல் பேசும் ஒரு நச் படம் கிடைத்துள்ளது.

என்ஜிகே
வெள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கி அரசியல்வாதிகளிடம் கொடுத்துவிட்டோம் என சாய் பல்லவி சொல்லும் வசனம் முதல், ஓவியனோட புள்ளைக்கு அப்பா என்ன சொல்லித் தருவாரு ஓவியம் வரைய, நான் மிலிட்ரியோட புள்ளைடா எனக்கு ஓடி ஒளியவா சொல்லித் தந்து இருப்பாரு என சூர்யா பேசும் வசனம் என அனைத்தும் பட்டைய கிளப்புகின்றது.