சினிமா செய்திகள்
அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Published
4 years agoon
By
seithichurul
அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் பிங்க். அந்த படத்தின் தமிழ் மொழி ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.
தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாராகி வரும் இந்தப் படத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், பிக்பாஸ் அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். எச்.விநோத் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அண்மையில் இந்த படத்தில் இடம்பெறும் வானில் இருள் மற்றும் காலம் பாடல் உள்ளிட்டவையும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
ஆகஸ்ட் 15-ம் தேதி நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரும், மறைந்த ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தனது டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
#NerKondaPaarvai will release Worldwide on August 8th. #NerKondaPaarvaiFromAug8 #AjithKumar @ZeeStudiosInt #HVinoth #BayViewProjects @SureshChandraa @ShraddhaSrinath @thisisysr @nirav_dop @dhilipaction @RangarajPandeyR @ProRekha @DoneChannel1 pic.twitter.com/OXEUUJmsA3
— Boney Kapoor (@BoneyKapoor) July 15, 2019
You may like
-
அட்லி இயக்கத்தில் அஜித்? அடேங்கப்பா இது என்ன படத்துல கூட வராத ட்விஸ்ட்டா இருக்கே!
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
அஜித்தை சந்திக்கவே முடியலை! 8 வருஷம் வெயிட் பண்ணி வெறுத்துட்டேன்; பிரேமம் இயக்குநர் புலம்பல்!
-
ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. இந்த நடிகை தான் அஜித்துக்கு ஏகே 62 படத்தில் ஜோடியாம்?
-
நாயகியாகும் உலக அழகி, படப்பிடிப்புக்கு முன்பே பிசினஸ்: அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் மாஸ் தகவல்கள்!
-
AK 62 படம் நல்லா பண்ணனும் ஐயப்பா! சபரிமலையில் விக்னேஷ் சிவன்; அஜித் ரசிகர்கள் வேண்டுதல்!