வீடியோ
தூம் பட பாணியில் தெறிக்கவிடும் வார் டீஸர்!

யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பில் வெளிவந்த தூம் பட பாணியில் உருவாகியுள்ள வார் படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகியுள்ள வார் படத்தில், தூம் 2 படத்தில் பார்த்த ஹிரித்திக் ரோஷன் ஆக்ஷன் மீண்டும் நம் நினைவுக்கு வரும் அளவிற்கு ஸ்டண்ட் காட்சிகள் செம மாஸாக இருக்கிறது.
ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து டைகர் ஷெராஃப்பும் நடிப்பு மற்றும் ஆக்ஷனில் மிரட்டியுள்ளார்.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். நாயகியாக வாணி கபூர் நடித்துள்ளார்.
இரண்டு ஹீரோக்களுக்கு இடையே நடைபெறும் யுத்தமாக இந்த வார் படம் உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வார் படம் ரிலீசாகிறது.