இந்தியா
2026 ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாள் அறிவிக்கப்பட்டது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான 2026ம் ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 3 ம் தேதி நடைபெறும் என தேசீய தேர்வுகள் முகமை இன்று அறிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு மே மாதம் பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒடியா, தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட மொழிகளில் மாணவ மாணவியர் தேர்வுகளை எழுதலாம்.
இந்த தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இன்று முதல் மே மார்ச் 8ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பியுஎம்எஸ், பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புக்களில் சேரவும் நீட் தேர்வு எழுதப்பட வேண்டும்.
பயாலஜி(உயிரியல்), கெமிஸ்ட்ரி(வேதியியல்) மற்றும் ஃபிசிக்ஸ்(இயற்பியல்) என்ற மூன்று பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறும். உயிரியலில் 340 கேள்விகள், வேதியியலில் 160 கேள்விகளும் இயற்பியலில் 120 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 620 வினாக்கள் இடம்பெறும். தவறான விட அளித்தால் ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மைனஸ் மதிப்பெண் கழிக்கப்படும்.
தேர்வுக்கான பாடத்திட்டம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்ய www.examinationservices.nic.in/neetc2026 என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
தேர்வுக்கட்டணம்
பொதுப்பிரிவுக்கு ரூ.1700ம் பொருளாதாரத்தில் பினதங்கியவர் மற்றும் இதர பிறபடுத்தப்பட்டவர்களுக்கு ரூ.1600ம் எஸ்சி எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.1000ம் இந்தியாவிற்கு வெளியிலிருந்து விண்ணப்பிப்போர் ரூ.9500ம் தேர்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
மற்ற விவரங்களுக்கு மேலே குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.


















