சினிமா செய்திகள்
எந்தவொரு மேக்அப் கூட போடாமல் நயன்தாரா நடித்தார்- நெற்றிக்கண் இயக்குநர் பெருமிதம்!

நடிகை நயன்தாரா நெற்றிக்கண் படத்தில் ஒரு துளி கூட மேக்அப் இல்லாமல் நடித்துள்ளார் என நெற்றிக்கண் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் இன்று ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் நெற்றிக்கண். இந்தப் படத்தில் நயன்தாரா பார்வை இல்லாத பெண் ஆக நடித்துள்ளார். பார்வை இல்லாத ஒரு பெண் தனது அபார அறிவாற்றலால் குற்றங்களைக் கண்டுபிடிப்பது போன்றது தான் கதைக்களம்.
இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் சூழலில் நயன்தாரா நடிப்பு குறித்துப் பெருமையாகப் பேசி உள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ். அவர் கூறுகையில், “இந்தப் படத்தின் கதை உருவாகும் போதே வழக்கமான கறுப்புக் கண்ணாடியை நாயகிக்கு மாட்டிவிடக் கூடாது என்பதில் அனைவருமே உறுதியாக இருந்தோம். படத்தில் நயன்தாரா ஒரு சின்ன மேக்அப் கூடப் போடவில்லை.
அவருக்கு எடுத்த டெஸ்ட் ஷூட்டில் கூட பார்வையில்லாதோருக்கு இருக்கும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தினார். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும் குறிப்பு எடுத்துக் கொண்டு பெரும் உழைப்பில் நடித்துள்ளார் நயன்தாரா” எனப் பெருமிதாகப் பேசி உள்ளார்.









