Connect with us

உலகம்

பூமியை கடந்து சென்ற 1600 அடி நீள கோள்.. நாசாவின் கண்டுபிடிப்பால் அதிர்ச்சி..!

Published

on

விண்வெளி எப்போதும் மர்மமாகவும் ஆச்சரியம் தரக்கூடியதாகவும் இருக்கும் என்றும் நாம் விண்வெளியை அறிந்தது கையளவு தான் என்றும் இன்னும் அறியாதது கடல் அளவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பூமியை கடந்து 1600 அடி நீள கோள் ஒன்று சென்றதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிறு கோளால் பூமிக்கு ஆபத்து வருமா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி பூமியை கடந்து சுமார் 1.8 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கோள் ஒன்று பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட ஐந்து மடங்கு குறைவாகும். 2011 AG5 என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் அகலத்தை விட மூன்று மடங்கு நீளமானது. இந்த சிறுகோள் பாதுகாப்பாக பூமியைக் கடந்ததாகவும், இந்த கோளால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

asteroid

இந்த கோளின் அளவு, வடிவம், சுழற்சி மற்றும் மேற்பரப்பு விவரங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த் வருகின்றனர். இதேபோன்று ஒரு சிறுகோள் கடந்த 2011 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இன்னொரு சிறு கோள் கண்டறியபட்டுள்ளது.

இந்த சிறுகோளை விஞ்ஞானிகள் கூர்ந்து ஆராய்ந்ததில் அது 1,600 அடி நீளமும் 500 அடி அகலமும் கொண்ட பாறை என்பது தெரியவந்தது. சிறுகோளின் அளவு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்திற்கு கிட்டத்தட்ட சமமானது ஆகும்.

2011 AG5 சிறுகோள் சூரியனை 621 நாட்களுக்கு ஒருமுறை வட்டமிடுவதாகவும், இந்த சிறுகோள் அடுத்ததாக பூமிக்கு அருகில் 2040 ஆம் ஆண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?