Connect with us

தமிழ்நாடு

மக்கள் பணத்தை 400 கோடி ரூபாயை ஏப்பம் விட்டு வெளிநாடு தப்பிச்சென்ற கோவை தம்பதி!

Published

on

கோவை மாவட்டம் குறிஞ்சி நகரில் வசிக்கும் விமல் குமார் மற்றும் இவரது மனைவி ராஜேஸ்வரி தம்பதி இணைந்து ஆல்பா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். மேலும் மிஸ்டர் மணி என்ற யூடியூப் சேனலை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிதி முதலீடு, அந்நிய செலாவணி தொடர்பாக கருத்தரங்கு நடத்துவது இவர்களது வழக்கம். அப்போது தங்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 10 மாதங்களுக்கு தொடர்ந்து 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

மேலும் புதிய முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்துவோருக்கு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை நம்பி அவரிடம் ஆயிரக்கணக்கானோர் 400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது .

ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு அசல், வட்டி, ஊக்கத்தொகை என எதையும் தராமல் 10 மாதங்களுக்கு முன் வீடு அலுவலகத்தை காலி செய்துவிட்டு இந்த தம்பதி தலைமறைவாகிவிட்டனர். அவரால் பாதிக்கப்பட்ட 250 பேர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர் .

மேலும் தற்போது தலைமறைவாக இருந்தபோதிலும் யூடியூப் சேனல் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பாலகுமார் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவான தேடிவருகின்றனர். விமல்குமார் மற்றும் அவரது மனைவியும் வெளிநாடு தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?