வைரல் செய்திகள்
இத்தாலியில் வெடித்துச் சிதறும் எரிமலை… இருளை விழுங்கிய தீபிழம்பு- வைரல் வீடியோ

இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா வெடித்துச் சிதறும் வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது.
இத்தாலியில் உள்ள சிசிலி பகுதியில் இந்த மவுண்ட் எட்னா அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்த மலை தற்போது எரிமலையாக தீப்பிழம்புகளைக் கக்கி வருகிறது. நள்ளிரவில் வெடித்த எரிமலையின் தீப்பிழம்புகள் இத்தாலி வானங்களில் பரவி இரவையே வெளிச்சப் புகை மண்டலமாக மாற்றியுள்ளது.
இதன் வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தீபிழம்புகள் மலையைச் சுற்றி 5 கி.மீ சுற்றளவுக்கு தற்போது அதன் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாம். எரிமலை வெடிக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு அப்பகுதிகளில் 2.7 மேக்னிட்யூட் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.