தமிழ்நாடு
வரும் வாரங்களில் ஞாயிறு ஊரடங்கு இருக்காது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் வாரங்களில் முழு ஊரடங்கு ஞாயிறு அன்று இருக்காது என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அதிரடி முடிவு எடுத்த தமிழக அரசு திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் பிறப்பித்தது என்பது தெரிந்ததே.
அதுமட்டுமின்றி வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடப்படும் என்பது உள்பட பல்வேறு அதிரடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தால் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு இருக்காது என்றும் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அது மட்டுமின்றி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் விகிதமும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கர்நாடகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஊரடங்கு விலக்கி கொல்லப்பட்டதை அடுத்து தமிழகத்தில் மிக விரைவில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















