ஜோதிடம்
புதன் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் மாதத்தில் வெற்றி பெறும் ராசிகள்!

புதன் பகவான் கேது நட்சத்திரம் மகம் நட்சத்திரத்தில் கடந்த ஜூலை 19ஆம் தேதி நுழைந்தார். அவர் ஆகஸ்ட் 22 ஆம் தேதியில் வரை இந்த நட்சத்திரத்தில் பயணித்துக் கொண்டிருப்பார். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கவுள்ளன. இங்கு அந்த ராசிகள் எவை என்பதைப் பார்ப்போம்.
மேஷம்: புதன் பகவானின் மகம் நட்சத்திர பயணம் உங்கள் ராசியில் அதிர்ஷ்டத்தை சுமந்து வரவுள்ளதோடு, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஏற்படும்.
சிம்மம்: புதன் பகவானின் நட்சத்திர மாற்றம் உங்கள் வாழ்க்கைக்கு நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் வெற்றியடைய வாய்ப்பு அதிகரிக்கும். வேலையை மாற்ற நினைத்தால், அதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு: புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பயன்களை தரும். தொழில் ரீதியாக முன்னேற்றம் மற்றும் லாப வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கடின முயற்சிகளால் நல்ல பலன்கள் பெறுவீர்கள்.





















