சினிமா செய்திகள்
பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்.. திரைத்துறையினர் அஞ்சலி!

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன்(68 வயது) இன்று காலமானார்.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் கே.பாலசந்தர், ராம நாராயணன், விடு உள்ளிட்ட பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
1988-ம் ஆண்டு வீடு மனைவி மக்கள் என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாக டி.பி.கஜேந்திரன் எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம், எங்க ஊரு மாப்பிள்ளை, பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் 40-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் இவர் நடித்துள்ளார்.
2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இதயம் என்ற சன் தொலைக்காட்சி தொடரையும் இயக்கியுள்ளார்.

#image_title
வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்று வந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார். இவரது உடலுக்குத் திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.