பிற விளையாட்டுகள்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: தவறாக நடிகைக்கு வாழ்த்து கூறிய பிரபல நிறுவனம்!

73 கிலோ எடை கொண்ட உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நேற்று ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரியா மாலிக் தங்கம் வென்றார். அவர் பெலருசிய நாட்டின் மல்யுத்த வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியாவுக்கு தங்கம் வென்று பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ப்ரியா மாலிக் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கேஎஃப்சி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் மல்யுத்த வீரர் வீராங்கனை பிரியா மாலிக் அவர்களுக்கு வாழ்த்து கூறுவதற்கு பதிலாக நடிகை பிரியா மாலிக் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து இருந்தது.
இதுகுறித்து நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ப்ரியா மாலிக் கூறியபோது நான் தங்கத்தை அணிகலன்களாக மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். அதுமட்டுமின்றி எனக்கு எப்போதும் பசி எடுக்கும் என்றும் தவறாக டேக்கை பயன்படுத்தி உள்ளீர்கள் என்றும் காமெடியாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கேஎஃப்சி நிறுவனம் தவறான டுவிட்டை டெலிட் செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிரியா மாலிக் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றதை பல பிரபலங்கள் அவர் ஒலிம்பிக்கில் தங்கம் பெற்றதாக தவறாக பதிவு செய்தனர் என்பதும் அதன் பின்னர் ரசிகர்கள் அதனை திருத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
I only wear gold and I'm always hungry @KFC_India ????
Wrong tag ???? https://t.co/bS0ELOq08d— Priya Malik (@PriyaSometimes) July 25, 2021


















