உலகம்
தேடி வந்து வேட்டையாடுவோம்: தாலிபான்களுக்கு ஜோபைடன் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் அடுத்தடுத்து நடந்த 4 பயங்கர தற்கொலைப் படையினரின் குண்டு வெடிப்பு காரணமாக 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக நாங்கள் தேடி வந்து வேட்டையாடுவொம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடு சமீபத்தில் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்பதும் இதனை அடுத்து அந்நாட்டிலுள்ள அமெரிக்கர்கள், இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானை சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் திடீரென நேற்று இரவு இரட்டை வெடிகுண்டு வெடித்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தற்கொலை படைகள் நடத்திய இந்த தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் உள்பட 90 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காபூல் விமான நிலையம் மட்டுமன்றி மேலும் இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். வெடி குண்டு வெடிப்பு குறித்தும், இதில் 13 அமெரிக்க வீரர்கள் பலியானது குறித்தும் ஆலோசனை செய்ய அவசர கூட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட்டினார். அமெரிக்க அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
காபூல் இரட்டை வெடி குண்டு வெடிப்பில் 13 அமெரிக்க படையினர் உள்பட 90 பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதை எப்போதும் நாங்கள் மறக்க மாட்டோம் என்றும், தேடிவந்து வேட்டையாடி இதற்கான விலையை கொடுக்க வைப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















