வணிகம்
வருமான வரி கணக்கு தாக்கல் கடைசி நாள் இன்று: தாக்கல் செய்யாதால் அபராதம், சிறைத்தண்டனை வரை!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று என்பதால், பலரும் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்வதில் அவசரமாக உள்ளனர்.
இந்த முறை மத்திய பட்ஜெட்டில் ஊதியம் பெறும் நபர்களுக்கு வருட வருமானம் ₹12.75 லட்சம் வரை, மற்றவர்களுக்கு ₹12 லட்சம் வரை வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலருக்கு வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமா? எவ்வளவு வருமானம் இருந்தால் தாக்கல் செய்ய வேண்டும்? தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? என்ற குழப்பங்கள் எழுந்துள்ளன.
யார் தாக்கல் செய்ய வேண்டும்?
60 வயதுக்குட்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்தை மீறினால்
மூத்த குடிமக்கள் (60–80) – ₹3 லட்சம் மேல்
மிக மூத்த குடிமக்கள் (80+) – ₹5 லட்சம் மேல் இருந்தால் தாக்கல் செய்ய வேண்டும்.
வணிக நிறுவனங்கள், நஷ்டம் இருந்தாலும் தாக்கல் கட்டாயம்.
வெளிநாட்டு சொத்து வைத்திருப்பவர்கள், பெரிய வங்கி பரிவர்த்தனைகள் செய்தவர்கள், வருடாந்திர மின்சார கட்டணம் ₹1 லட்சம் மேல் இருந்தாலும் தாக்கல் செய்ய வேண்டும்.
தாக்கல் செய்யாததின் விளைவுகள்
வருமானம் ₹5 லட்சம் மேல் இருந்தால், தாமதமாக தாக்கல் செய்தால் ரூ.1,000–₹5,000 அபராதம்.
நிலுவை வரிக்கு மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும்.
இழப்புகளை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
அதிக வரி செலுத்தியிருந்தால் ரீஃபண்ட் தாமதமாகும்.
கடுமையான சந்தர்ப்பங்களில் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம்.
பான் கார்டு இருந்தால் கட்டாயமா?
பான் கார்டு இருப்பதால் மட்டும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால்,
ரூ.1 கோடி மேல் நடப்பு கணக்கில் டெபாசிட்
சேமிப்பு கணக்கில் ரூ.50 லட்சம் மேல் டெபாசிட்
வெளிநாட்டு பயணம் ரூ.2 லட்சம் மேல் செலவு ஆகிய நிபந்தனைகள் இருந்தால் தாக்கல் கட்டாயம்.
தொடர்ந்து ITR தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
கடன், கிரெடிட் கார்டு விண்ணப்பத்திற்கு உதவும்.
விசா பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
அரசாங்க டெண்டர்கள், நிதி பரிவர்த்தனைகளில் பயன்படும்.
வரி திரும்பப்பெறுதல் (Refund) விரைவாக கிடைக்கும்.
வரி நிபுணர்கள் “உங்கள் வருமானம் விலக்கு வரம்பை விடக் குறைவாக இருந்தாலும், பாதுகாப்புக்காகவும் நிதி நம்பகத்தன்மைக்காகவும் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது” என்று அறிவுறுத்துகின்றனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














