தமிழ்நாடு
ஈபிஎஸ் ஆதரவு தீர்ப்புக்கு பின்னால் பாஜக இருக்கிறதா? என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவானது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓபிஎஸ். தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பின்னணியில் பாஜக இருக்கிறதா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.

#image_title
இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பு கொண்டாடிவரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான வெற்றி தான். இரட்டை இலை கிடைத்துவிட்டதால் ஈரோடு கிழக்கில் வெற்றி பெற முடியுமா அவர்களால் என்றார்.
தொடர்ந்து எடப்பாடி தரப்பை விமர்சித்த தினகரனிடம், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பின்னால் பாஜக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை நாம் விமர்சிக்கக் கூடாது. ஜூலை 11 பொதுக்குழு செல்லுமா என்பதை தான் உச்சநீதிமன்றம் பார்த்திருக்கிறது. அதுதான் ஓபிஎஸ்-இன் முறையீடாகவும் இருந்தது. இந்நிலையில் பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னால் யாரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்றார்.





















