உலகம்
அதிர்ச்சி.. அமெரிக்காவில் 40 இந்தியர்கள் பலி!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பணிக்குச் சென்றுள்ள அமெரிக்காவில், 40 இந்தியர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் இன்னும் 1500-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மட்டும் அமெரிக்காவில் 2000 நபர்கள் கொரோனாவல் இறந்தனர். ஆனால் இதுவரை தமிழர்கள் கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் இறக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.




















